ஆணவப் படுகொலைகளுக்கு தனிச்சட்டம்: `முதல்வரின் பதில் ஏற்புடையதல்ல’ – தீண்டாமை ஒழிப்பு முன்னணி | Honor killing special act, demand to CM stalin

உடுமலை சங்கர் தொடங்கி பல்வேறு சாதி ஆணவப்படுகொலைகள் காவல் நிலையங்களில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள படாததால் நடந்தவைகளே. எனவேதான் சிறப்புச் சட்டம் அவசியமாகிறது. 
சாதி மறுப்புத் திருமணம் செய்து கொள்ளக்கூடிய தம்பதியினர் வாய்மொழியாகவோ எழுத்து மூலமாகவோ காவல் நிலையத்திலோ அல்லது அரசு அதிகாரியிடமோ ஒரு உறுதிமொழியை தெரிவித்த பின்பு அவர்களை பிரிப்பதற்கான நடவடிக்கைகளில் காவல்துறை ஈடுபடக்கூடாது. மீறினால் சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது அபராதம் மற்றும் சிறை தண்டனை விதிப்பதற்கு வகை செய்யப்பட வேண்டும்.
குற்றவாளிகளில் கொலை செய்தவர்களை இ.பி.கோ 302 ன் படி  தண்டிக்கப்படுவது போல் கொலை மற்றும் குற்றங்கள் திட்டமிடுகிறபோது உடன் இருப்பவர்களும் கொலை குற்றவாளியாகவே கருதப்பட வேண்டும்.

ஆணவப் படுகொலைகளுக்கு தனிச்சட்டம்: `முதல்வரின் பதில் ஏற்புடையதல்ல' - தீண்டாமை ஒழிப்பு முன்னணிஆணவப் படுகொலைகளுக்கு தனிச்சட்டம்: `முதல்வரின் பதில் ஏற்புடையதல்ல' - தீண்டாமை ஒழிப்பு முன்னணி

ட்விட்டர்

கொலைக்குப் பிறகு அல்லது வன்முறைகளுக்கு பிறகு அதனை புகழ்கிற அல்லது பொதுவெளியில் பகிரங்கமா ஆதரிக்கிற நடவடிக்கைகளும் குற்றமாக கருதப்பட வேண்டும்.

எனவே சாதிய ஆணவப்படுகொலைகளை தடுத்து நிறுத்திட தமிழக அரசு உடனடியாக சிறப்பு பிரிவுகளுடன் கூடிய சிறப்பு சட்டத்தை நிறைவேற்றிட வேண்டும். தமிழ்நாட்டின் சமூகநீதிப் பாரம்பரியம் மேலும் மெருகூட்டப்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *