ஆம்ஸ்ட்ராங் கொலை: `அரசியல் பின்புலம் இருக்கிறது; இது திராவிட மாடலா… கொலை மாடலா?’ – தமிழிசை காட்டம் | tamilisai slams dmk and cm stalin over Armstrong murder issue

மிகவும் பலம்வாய்ந்த குற்றவாளிகள், சிறையிலிருந்தே குற்றத்தை செய்துகொண்டிருக்கிறார்கள். இதை அரசு ஊக்கப்படுத்திக் கொண்டிருக்கிறது. இது திராவிட மாடலா.. தினம் ஒரு கொலை மாடலா என்று எனக்கு தெரியவில்லை. நியாயம் கிடைக்க வேண்டும். இது மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்ளப்பட வேண்டிய ஒன்று. சிபிஐ விசாரணை தேவை. திருநெல்வேலியில், கூட்டணிக் கட்சியை சேர்ந்தவர் கொலை செய்யப்பட்டார். அந்தக் குற்றவாளிகளையே இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை. நேற்று முன்தினம் அ.தி.மு.க-வை சேர்ந்தவர், நேற்று வி.சி.க-வை சேர்ந்தவர், இன்று பா.ம.க-வை சேர்ந்தவர் வெட்டப்பட்டிருக்கிறார்

அரசியல் கொலைகள் அதிகரித்திருக்கிறது. ஆம்ஸ்ட்ராங்க் அவர்களின் இறுதி உரையை கேட்டால், அதில் ஆளும் கட்சியையும், முதல்வரையும், முதல்வரின் மகனையும் கடுமையாக சாடியிருக்கிறார். “நம்மை அந்தக் கட்சியில் சேர்க்க வேண்டும் எனத் திட்டமிடுகிறார்கள். நாம் அதில் சேரக் கூடாது’ எனப் பேசுகிறார். எனவே, இந்தக் கொலையில் அரசியல் பின்புலம் இருக்கிறது. முதலமைச்சரின் தொகுதியும் இந்த வட சென்னையில்தான் இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *