“இங்கிலாந்தில் இருந்து திரும்பிய 100 டன் தங்கம்!” – இந்த தங்கம் எதனால் இங்கிலாந்திற்கு சென்றது?!|How gold go to England? – 100 tonnes of gold trip to India from UK

இதுப்போக, இந்தியாவுக்கு சொந்தமான தங்கம் வெளிநாடுகளில் இன்னும் 413.9 டன் தங்கம் உள்ளது. மொத்தமாக, இந்தியாவுக்கு சொந்தமாக தற்போது 822 டன் தங்கம் உள்ளது.

2023-24 நிதியாண்டில் மட்டும் இந்தியா, புதிதாக 27.46 டன் தங்கம் வாங்கியுள்ளது என்று கூறுகின்றனர்.

அடமானம் டூ மீட்பு அடமானம் டூ மீட்பு

அடமானம் டூ மீட்பு

இந்தியாவுக்கு சொந்தமான தங்கம் எப்படி அந்த வங்கிக்கு சென்றது?

1990-91 அந்நிய செலாவணி நெருக்கடியின் போது, இந்தியா தன்னிடமிருந்த தங்கத்தை பேங்க ஆஃப் இங்கிலாந்திடம் அடமானம் வைத்து 405 மில்லியன் டாலர் கடன் வாங்கியது. 1991-ம் ஆண்டு நவம்பர் மாதமே, இந்த அடமானத்தை இந்தியா மீட்டுவிட்டது. ஆனாலும் போக்குவரத்து காரணங்கள், வணிக லாபம் போன்ற காரணங்களுக்காக இவ்வளவு நாள்கள் இந்தியா அங்கேயே தங்கத்தை வைத்திருந்தது.

இப்போது எதற்காக கொண்டுவரப்பட்டது?

தற்போது நிலவி வரும் பல்வேறு சர்வதேச பிரச்னை போன்ற காரணங்களுக்காக இந்தியா மீண்டும் தனது தங்கத்தை இங்கேயே கொண்டு வந்துவிட்டது. இதனால், லாக்கர் வாடகை குறையும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *