இஸ்ரேல் தாக்குதலை `இனப்படுகொலை’ என்று கூறிய இஸ்லாமிய செவிலியர்; டிஸ்மிஸ் செய்த அமெரிக்க மருத்துவமனை! | Palestinian American Muslim nurse fired after she called israel attack is genocide

பாலஸ்தீனத்தின் (Palestine) ஹமாஸ் (Hamas) குழு கடந்த அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேல் (Israel) மீது திடீர் தாக்குதல் நடத்தியது. இதில், 1,100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், 250-க்கும் மேற்பட்டோரை ஹமாஸ் குழுவினர் பணயக்கைதிகளாக கடத்திச் சென்றதாகவும் இஸ்ரேல் கூறுகிறது. இதற்கு எதிர் தாக்குதல் என்ற பெயரில் அக்டோபர் 8-ம் தேதி அமெரிக்காவின் நிதி மற்றும் ஆயுத உதவியுடன் பாலஸ்தீனத்தின் காஸா (Gaza) பகுதியில் போர்தொடுத்த இஸ்ரேல் இன்றுவரைத் தொடர்ந்து தாக்குதல் நடத்திவருகிறது.

ஓயாமல் நடந்துகொண்டிருக்கும் இஸ்ரேலின் இந்த 8 மாத தாக்குதலில், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள், பத்திரிகையாளர்கள், மருத்துவர்கள், மனிதாபிமான உதவிகளைச் செய்துவருபவர்கள் என கிட்டத்தட்ட 36,000 பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர். 81,000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருக்கின்றனர். சமீபத்தில் ஐந்து நாள்களுக்கு முன்பு, பொதுமக்கள் தஞ்சமடைந்திருக்கும் பாதுகாப்பு முகாம்கள் நிறைந்த ராஃபாவில் (Rafah) தாக்குதல் நடத்தக்கூடாது என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட… இரண்டாவது நாளிலேயே அங்கு இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இஸ்ரேலின் இந்தத் தாக்குதலுக்கு, பொதுமக்களில் கிட்டத்தட்ட 45 பேர் பலியாகினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *