`உக்ரைன் மீது படையெடுத்தால், NATO உடைந்துவிடும் என புதின் எதிர்ப்பார்த்தார் ஆனால்…’- பைடன் காட்டம் | Joe Biden addresses at NATO meeting in the United States

ரஷ்ய ஏவுகணைத் தாக்குதல்களிலிருந்து உக்ரைன் நகரங்களையும், உக்ரைன் வீரா்களையும் பாதுகாப்பதற்காக இந்தத் ஆயுதங்கள் அனுப்பப்படவுள்ளன. உக்ரைன் மீது படையெடுத்தால் இந்த நேட்டோ அமைப்பு உடைந்துவிடும் என ரஷ்யா அதிபர் புதின் எதிர்ப்பார்த்தார். ஆனால், இந்த நேட்டோ அமைப்பு முன்பைவிட பலம்வாய்ந்ததாக மாறியிருக்கிறது. போா் தொடங்குவதற்கு முன்பும், இப்போதும் சுந்ததிர நாடாக இருக்கும் உக்ரைன் இனியும் அப்படியே தொடரும்.” எனக் காட்டமாக தெரிவித்தார்.

நேட்டோ உச்சி மாநாடு - அமெரிக்கா - 2024நேட்டோ உச்சி மாநாடு - அமெரிக்கா - 2024

நேட்டோ உச்சி மாநாடு – அமெரிக்கா – 2024

அதைத் தொடர்ந்து பேசிய உக்ரைன் பிரதமர் ஜெலன்ஸ்கி, “அமெரிக்காவில் அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் அதிபா் தோ்தலின் முடிவுகள் வெளியானதற்குப் பிறகு உக்ரைனுக்கு உதவியளிப்பது குறித்து முடிவடுக்கலாம் என அனைத்து நாடுகளும் கருதுகின்றன. உண்மையில் புதினும் அமெரிக்க அதிபா் தோ்தல் முடிவுத் தேதியை எதிா்பாா்த்துக் காத்திருக்கிறாா். எனவே, அனைத்து நாடுகளும், அமெரிக்க தேர்தல் முடிவுகள் குறித்து சிந்திக்காமல் உறுதியான முடிவுகளை இப்போதே எடுக்க வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.

உண்மையில் நேட்டோ உச்சி மாநாட்டை தேர்தல் பிரசார களமாக பயன்படுத்தி, தன் அதிகாரத்தை தக்கவைத்துகொள்ளவே அமெரிக்காவின் தற்போதைய அதிபரும், அதிபர் தேர்தல் வேட்பாளருமான ஜோ பைடன் விரும்புகிறார் என சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *