எதிர்க்கட்சித் தலைவர் பதவி: தயங்கும் ராகுல்… வேறு யார் யாருக்கு வாய்ப்பு?! | Will Rahul become the leader of the opposition

நாடாளுமன்றத் தேர்தலில், வெளியான கருத்துக்கணிப்புகளை தாண்டி, 234 இடங்களில் வெற்றிபெற்றிருக்கிறது இந்தியா கூட்டணி. பெரும்பான்மைக்கு இன்னும் 38 இடங்களே தேவைப்படும் நிலையில் அடுத்தகட்ட முடிவுகள் குறித்துத் திட்டமிட, இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் தேர்தல் முடிவுகள் வெளியானதற்கு அடுத்த நாள் டெல்லியில் நடைபெற்றது. ஆனால், அந்த ஆலோசனைக் கூட்டத்தில், “ஆட்சி அமைக்கத் தேவையான நம்பர் நமக்கு இல்லை. இழுத்துப் பிடித்து ஆட்சியெல்லாம் அமைக்க வேண்டாம். பழைய பலத்தில் அவர்கள் இல்லை. எனவே, இனி அவர்கள் நினைத்ததெல்லாம் செய்ய முடியாது” என சில தலைவர்கள் ஆலோசனை சொல்ல, எதிர்க்கட்சி வரிசையில் அமர்வது என முடிவெடுக்கப்பட்டதாகச் சொல்கிறார்கள்.

இந்தச் சூழலில் எதிர்க்கட்சித் தலைவர் யார் என்ற கேள்வி எழுந்தபோது, “இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் கட்சிதான் அதிக எண்ணிக்கையில் வென்றிருப்பதால், அது தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரத்தை காங்கிரஸிடமே விட்டுவிட்டோம்” என்கிறார்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்தியா கூட்டணித் தலைவர்கள்.

இந்தியா கூட்டணிஇந்தியா கூட்டணி

இந்தியா கூட்டணி

இதையடுத்து இந்தியா கூட்டணி சார்பில் யார் எதிர்க்கட்சித் தலைவராக வாய்ப்பு இருக்கிறது என்கிற கேள்வி பரவலாக எழுந்திருக்கிறது. அது தொடர்பாக இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள தமிழ்நாட்டின் தலைவர்கள், காங்கிரஸ் கட்சியின் சீனியர்கள் சிலரிடம் பேசினோம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *