“ஒப்பந்தத்தை மீறி கார்கில் மீது தாக்குதல் நடத்தியது எங்கள் தவறு தான்..!" – நவாஸ் ஷெரீப் ஒப்புதல்

பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப். இவர் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் – நவாஸ் கட்சியின் தலைவராக இருந்தார். பனமா பேப்பர் வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகினார். இந்த நிலையில் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் – நவாஸ் கட்சி தலைவர் பதவிக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்தத் தேர்தலில் நவாஸ் ஷெரீப் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் கட்சியின் தலைவராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.

லாகூர் ஒப்பந்தம்

இந்த நிலையில், இந்திய முன்னாள் பிரதமர் வாஜ்பாயுடன் மேற்கொண்ட லாகூர் ஒப்பந்தத்தை மீறி கார்கில் தாக்குதல் நடத்தியது தவறுதான் எனத் தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாக, நவாஸ் ஷெரீப் கூறுகையில், “1998-ம் ஆண்டு மே 28-ம் தேதி பாகிஸ்தான் 5 அணுகுண்டு சோதனைகளை நடத்தியது. அதன்பிறகு, பிப்ரவரி 21, 1999 அன்று டெல்லியில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க உச்சிமாநாட்டில் வாஜ்பாய் எங்களுடன் ஒப்பந்தம் செய்தார்.

ஆனால் நாங்கள் அந்த ஒப்பந்தத்தை மீறி 1999-ம் ஆண்டு கார்கில் மீது தாக்குதல் நடத்தியது எங்கள் தவறு தான். நாங்கள் அணுகுண்டு சோதனை நடத்துவதைத் தடுக்க அப்போதைய அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் 5 பில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்க முன்வந்தார், ஆனால் நான் அதை ஏற்க மறுத்துவிட்டேன். ஒருவேளை என் இருக்கையில் இம்ரான் கான் இருந்திருந்தால், அமெரிக்கா வழங்கிய வாய்ப்பை ஏற்றுக்கொண்டிருப்பார்.” எனத் தெரிவித்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *