நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில், ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் தி.மு.க கூட்டணியில் நவாஸ்கனி, அ.தி.மு.க சார்பில் ஜெயபெருமாள், பா.ஜ.க கூட்டணி சார்பில் முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க தொண்டர்கள் உரிமைக் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம், நாம் தமிழர் கட்சியின் சந்திரபிரபா ஜெயபால் மற்றும் 21 சுயேச்சைகள் என 25 பேர் போட்டியிட்டனர். இதில், தி.மு.க கூட்டணியின் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ் கனி, ஓ.பன்னீர்செல்வத்தைவிட 1,66,782 வாக்குகள் கூடுதலாகப் பெற்று வெற்றி பெற்றார்.
பா.ஜ.க கூட்டணியி பலாப்பழ சின்னத்தில் சுயேச்சையாகப் போட்டியிட்ட ஓ.பன்னீர்செல்வம் 3,42,882 வாக்குகளும், அ.தி.மு.க வேட்பாளர் ஜெயபெருமாள் 99,780 வாக்குகளும் பெற்றனர். இந்த நிலையில், அ.தி.மு.க தொண்டர்கள் உரிமைக் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், “ஒற்றைக் குச்சியை ஒடிப்பது சுலபம், கத்தைக் குச்சியை முறிப்பது கடினம். இனியும் சமாதானம் சொல்லி, தோல்விக்கு தொண்டர்களைப் பழக்குவது பாவ காரியமாகும்.
`தாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம், ஓர் வழி நின்று, நேர்வழி சென்றால், நாளை நமதே’ என்ற மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் மந்திர மொழியை மருந்தாகக் கொள்வோம். நமது வெற்றியை நாளை சரித்திரமாக்கிட மனமாட்சியம் மறந்து ஒன்றரைக் கோடி தொண்டர்களும் ஒன்றாகுதல் காண்போம். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உச்சத்தில் அமர்த்திப்போன கட்சியையும், அவர் ஒப்படைத்துப்போன ஆட்சியையும் ஒற்றுமையால் மீட்டெடுக்க எத்தகைய தியாகத்துக்கும் ஆயத்தமாகுவோம்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb