‘கள்ளக்குறிச்சி… கள்ளச்சாராயம்… கண்ணீர்…’ – உயிர்போகும் வரை கைகட்டி நின்ற அரசு இயந்திரம் | 37 people died after drinking illicit liquor in kallakurichi

தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, “தி.மு.க ஆட்சியில் கடந்த 2 ஆண்டுகளில் நடைபெற்றுள்ள கள்ளச்சாராய உயிரிழப்புகள், 1980 காலகட்டத்தில் ஏற்பட்டதைப் போல, தமிழகம் 40 ஆண்டுகள் பின்னோக்கிச் செல்கிறதா என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது. நேற்றைய தினம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை அமைச்சரை பதவி விலக்கம் செய்ய, முதல்வர் ஸ்டாலினை கேட்டுக் கொண்டிருந்தோம். ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளில் சுமார் 60 உயிர்கள் கள்ளச்சாராயத்தினால் பறிபோனதற்குப் பின்னரும், முதல்வராகத் தொடர தனக்குத் தார்மீக உரிமை உள்ளதா என்பதை, அவர் எண்ணிப் பார்க்க வேண்டும்” என வெடித்திருக்கிறார்.

“கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்துவதில் தமிழக அரசும், காவல்துறையும் முற்றிலும் தோல்வியடைந்து விட்டது. இதற்கு முக்கியக் காரணம் சாராய வியாபாரிகளுக்கு தி.மு.க கொடுத்த ஆதரவுதான்” என பா.ம.க தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். இதேபோல் பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ராதாகிருஷ்ணன்,அறப்போர் இயக்கம்ராதாகிருஷ்ணன்,அறப்போர் இயக்கம்

ராதாகிருஷ்ணன்,அறப்போர் இயக்கம்

இதுகுறித்து நம்மிடம் பேசிய அறப்போர் இயக்கத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன், “இவ்வளவு பேர் உயிரிழந்து இருக்கிறார்கள் என்றால் ஒருநாளில் நடந்த விஷயம் அல்ல. பல நாட்களாக நடந்து வருகிறது. கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு கூட இப்படித்தான் நடந்தது. எல்லாம் முடிந்த பிறகு 200 லிட்டர் மெத்தனால் கைப்பற்றப்பட்டதாக சொல்கிறார்கள். இதெல்லாம் மக்களை ஏமாற்றும் செயல். கல்வராயன் மலை பகுதியில் தொடர்ந்து கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டு வருவதாக செய்திகள் வந்துகொண்டுதான் இருக்கின்றன. முன்பு நடந்த சம்பவத்திலும், தற்போதைய சம்பவத்திலும் தி.மு.கவினர் தான் ஈடுபட்டுள்ளனர். கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதால் நீக்குகிறோம் என வெற்று அறிக்கை மட்டும் வெளியிடுகிறார்கள். ஆனால் அவர்கள் மீது சட்ட ரீதியாக என்ன நடவடிக்கை எடுத்து இருக்கிறார்கள்?. அதுகுறித்து யாரும் வாய் திறக்கவில்லை. மது ஒழிப்பு துறை உயர் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு செல்லாமல், சென்னையில் இருக்கிறார்கள். இதெல்லாம் எந்த விதத்தில் நியாயம்?. உடனடியாக சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அமைச்சர் முத்துசாமி உடனடியாக பதவி விலக வேண்டும். குற்றத்தில் தொடர்புடைய அனைவருக்கும் கொலை குற்றம் செய்தவர்களுக்கான தண்டனை வழங்கப்பட வேண்டும். மேலும் அதை பொது வெளியில் தெரியப்படுத்த வேண்டும்” என்றார்.

முதலில் ஒரு கள்ளச்சாராயம் சம்பவம் நடந்தது, அதில் பலியானவர்களுக்கு இறுதி சடங்கு நிகழ்விலும் கள்ளச்சாரயம் விற்கப்பட்டது என்றால், இது அரசு நிர்வாகத்தின் செயலற்ற தன்மையை காட்டுவதாக வேதனை தெரிவிக்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். மேலும் முதலிலே மரணத்துக்கு காரணம் கள்ளச்சாரயம் தான் என அரசு ஒப்புக்கொண்டிருந்தால் இறுதி சடங்கிலாவது கள்ளச்சாரயம் விற்பனை தடுக்கப்பட்டிருக்கும். ஆனால் உயிரிழப்புகள் நடக்கும் வரை அரசு நிர்வாகம் கைகட்டி வேடிக்கை பார்த்திருப்பது அவலத்தின் உச்சம்..!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *