கள்ளச்சாராய மரணம்: “கள்ளக்குறிச்சி விரைகிறேன்!” – எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி | kallakurichi illegal liquor issue edappadi goes to kallakurichi

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 29-ஆக அதிகரித்திருக்கும் நிலையில், 94 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். அவரிகளில் 5 பேர் நிலைமை கவலைக்கிடமாக இருக்கிறது. இது தொடர்பான விசாரணையில், பாக்கெட்‌ சாராயம்‌ விற்ற கோவிந்தராஜ்‌ என்கிற கண்ணுகுட்டி (49) கைது செய்யப்பட்டிருக்கிறார். இந்த விவகாரம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின், “கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தியவர்கள் உயிரிழந்த செய்திகேட்டு அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்கள் குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். சமூகத்தைப் பாழ்படுத்தும் இத்தகைய குற்றங்கள் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படும்.” எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவரும், அ.தி.மு.க பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, “கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தோர் எண்ணிக்கை 29-ஆக உயர்ந்துள்ள செய்தி கேட்டு பேரதிர்ச்சி அடைந்தேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *