சுட்டிக்காட்டிய ஜூ.வி; பள்ளி மாணவர்களின் பிரச்னைக்கு உடனடி தீர்வுக்கண்ட சேலம் மாவட்ட ஆட்சியர்! | Salem district collector provided bus facility for the Government school students

சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே வடுகப்பட்டி கிராமம் உள்ளது. இங்கு பொன்னி அம்மாள் அரசு உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த விவசாய மற்றும் கூலித்தொழிலாளர்களின் குழந்தைகள் சுமார் 250 பேர் படித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக இ.புதுப்பாளையம், துத்திப்பாளையம், நாயக்கன் வலவு, மயில்புறாகாடு, தாதவராயன்குட்டை, காஞ்சாம்புதூர், மாவெளிபாளையம், ஒழுகுபாறை, சங்ககிரி கெமிக்கல் பிரிவு போன்ற பகுதிகளிலிருந்து பள்ளிக்கு வரக்கூடிய மாணவர்களுக்கு நேரத்திற்குப் பேருந்து இல்லாமலும், அதேபோல கடந்த 2 ஆண்டுகளாக பஸ் பாஸ் வழங்காமலும் இருந்தது.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு ஜூ.வி தகவலைக் கொண்டு சென்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *