சேலம்: 2 ஆண்டுகளாகச் சிரமப்பட்ட அரசுப் பள்ளி மாணவர்கள்; பேருந்து வசதி ஏற்படுத்திக் கொடுத்த ஆட்சியர்! \ salem collector facilitates bus for government school students

ஆனால் இந்தப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் பஸ் பாஸ் இல்லாமலும், முறையான பஸ் வசதி இல்லாமலும் கடந்த சில ஆண்டுகளாகவே பெரும் சிரமங்களைச் சந்தித்து வந்திருக்கின்றனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக இ.புதுபாளையம், துத்திபாளையம், நாய்க்கன் வலவு, மயில்புறாகாடு, தாதவராயன்குட்டை, காஞ்சாம்புதூர், மாவெளிபாளையம், ஒழுகுபாறை, சங்ககிரி கெமிக்கல் பிரிவு போன்ற பகுதிகளிலிருந்து இந்தப் பள்ளிக்கு படிக்க வரக்கூடிய மாணவர்களுக்கு நேரத்திற்கு பஸ் வசதி இல்லாமல் இருந்துள்ளது. அதனால் பெற்றோர்களே தங்களது சொந்த செலவில் வேன் வாடகைக்குப் பிடித்து தங்கள் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பிவைத்து வந்துள்ளனர்.

பிருந்தாதேவி ஐ.ஏ.எஸ்பிருந்தாதேவி ஐ.ஏ.எஸ்

பிருந்தாதேவி ஐ.ஏ.எஸ்

இந்த நிலையில், இது குறித்த தகவல் சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவியின் கவனத்திற்குச் சென்றிருக்கிறது. உடனே போக்குவரத்துறை அதிகாரிகளிடம் பேசிய ஆட்சியர், மாணவர்கள் பள்ளிக்குச் சென்றுவர ஏதுவாக அந்தப் பகுதியில் பஸ் போக்குவரத்தைத் தொடங்க வழிவகை செய்யுமாறு உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து, தற்போது அந்தப் பள்ளியைச் சுற்றியிருக்கும் பகுதிகளில் அரசு பஸ் வசதி ஏற்படுத்துவது தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆட்சியரின் நடவடிக்கை, மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *