ஜூலை 23-ஆம் தேதி தாக்கல் ஆகிறது மத்திய பட்ஜெட்..! நிதி அமைச்சகப் பணியாளர்கள் தீவிரம்! | Central Budget to be presented on July 23 – Ministry of Finance

கடந்த ஏப்ரலில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றதால், 2024-25-ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டைக் கடந்த பிப்ரவரி மாதம் 1-ஆம் தேதி அன்றே தாக்கல் செய்தார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாரமன்.

இந்நிலையில், 2024-25 நிதி ஆண்டுக்கான முழு பட்ஜெட் வருகிற 23-ஆம் தேதி அன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண்ட் ரிஜிஜு அறிவித்திருக்கிறார்.

நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத் தொடர் வருகிற 22-ஆம் தேதி ஆரம்பித்து, ஆகஸ்ட் 12-ஆம் தேதி வரை நடக்கிறது. இந்தக் கூட்டத் தொடர் தொடங்கிய இரண்டாம் நாளன்று இந்த நிதி ஆண்டுக்கான முழு பட்ஜெட்டைத் தாக்கல் செய்யவிருக்கிறார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்!

பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆட்சி முடிந்த ஏப்ரலில் நாடாளுமன்றத் தேர்தல் நடந்ததால், 2024-25-ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டைக் கடந்த பிப்ரவரி மாதம் 1-ஆம் தேதி அன்றே தாக்கல் செய்தார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாரமன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *