`திருடர்கள் பூமியில் மோடிக்கு என்ன வேலை?’ – கடுகடுக்கும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்! | congress senior leader evks elangovan slams pm modi

பிரதமர் மோடி கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் பாறையில் இரண்டு நாள்களாக தியானத்தில் ஈடுபட்டார். இந்நிலையில், ஈரோட்டில் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், “பிரதமர் மோடி தேர்தல் நடத்தை விதிகளை மீறி கன்னியாகுமரிக்கு வந்து தியானம் செய்கிறார். தேர்தல் ஆணையம் இதை கண்டுகொள்வதாக இல்லை. ஏனென்றால், தேர்தல் ஆணையம் மோடியின் கைப்பாவையாக மாறி பல காலம் ஆகிவிட்டது.

தந்தை பெரியாருக்கு எதிராக யாகம் செய்த மகாராஜாவின் நிலை என்ன ஆனது என்று எல்லோருக்கும் தெரியும். எனவே, தமிழ்நாட்டுக்குள் வந்து யாகமும், தியானமும் செய்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்த பிறகு தேர்தல் ஆணையத்தில் தவறு செய்த அதிகாரிகள் நீதிமன்றத்தின் முன் நிற்க வைக்கப்படுவார்கள்.

பிரதமர் மோடிபிரதமர் மோடி

பிரதமர் மோடி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *