திருமாவின் மைக்கை அணைத்த ஓம் பிர்லா | எதிர்க்கட்சித் தலைவராக ராகுல்.. மக்களவை முதல் நாள் Highlights! | Lok Sabha speaker off mic during MP Thirumavalavan speech, Opposition MPs counter attacks

இவர்களைப்போல, வாழ்த்துகளுடன் உரையைத் தொடங்கிய தமிழ்நாட்டு எம்.பி-யும், வி.சி.க தலைவருமான திருமாவளவன், “மீண்டும் இரண்டாவது முறையாக அவையின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தங்களுக்கு வி.சி.க மற்றும் இந்தியா கூட்டணியின் சார்பில் வாழ்த்துகள். தங்கள் இருக்கையில் வலது பக்கத்தில் செங்கோல் உள்ளது. செங்கோல் என்பது அதிகாரத்தின் அடையாளம் அல்ல. யார் பக்கமும் சாயக் கூடாது, நேர்மையாக இருக்க வேண்டும் என்பதற்கான நீதி தவறாமையின் அடையாளம். தங்கள் இருக்கையின் அடையாளமும் அதுவே. கடந்த காலங்களில் நீங்கள் சிறப்பான சபாநாயகர் என்பதை நிரூபித்திருக்கிறீர்கள்.

திருமாவளவன்திருமாவளவன்

திருமாவளவன்

மேலும் தொடர்ந்து பேசிய திருமாவளவன், “நாடாளுமன்ற வளாகத்துக்குள் இருந்த புரட்சியாளர் அம்பேத்கர், மகாத்மா காந்தி, மகாத்மா ஜோதிபா பூலே ஆகிய தலைவர்களின் சிலைகளை ஓரமாகக் கொண்டுபோய் மறைவிடத்தில் வைத்திருக்கின்றனர். மக்களவைத் தலைவர் என்ற அதிகாரத்தைப் பயன்படுத்தி தாங்கள் அந்த சிலைகளை மீண்டும் அதே இடத்தில் வைக்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்துக்கொண்டிருந்தபோதே ஓம் பிர்லா மைக்கை அணைத்தார்.

மேலும் அடுத்த எம்.பி-யை பேச அழைத்தார். அதையடுத்து எதிர்க்கட்சி எம்.பி-கள் சத்தம் எழுப்பி, தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *