`நல்ல தலைவர்கள் தேவை’ என விஜய் பேசியிருப்பது புதிராக இருக்கின்றது. நல்ல தலைவர்கள் இல்லையென பேசுவதன்மூலம் தனித்து போட்டியிட விரும்புகிறாரோ என்ற விவாதமும் கிளம்பியிருக்கிறது” என்றனர்.
நம்மிடம் பேசிய தமிழக வெற்றிக் கழகத்தினர் சிலர், “நடிகர் விஜய் தனித்து போட்டியா.. அல்லது கூட்டணியுடன் தேர்தலை அணுகுவாரா என்பது இப்போதே சொல்ல முடியாது. ஆனால் எங்கள் தலைவர் விஜய்யின் நகர்வை தமிழ்நாடு அரசியலே உற்றுநோக்குகிறது என்பதற்கு இந்தவொரு நிகழ்வே சான்று. பலருடன் வெளிப்படையாகவே த.வெ.க-வுடன் கூட்டணி வைக்கலாம் எனப் பேச தொடங்கிவிட்டனர். இப்போதைக்கு கட்சி கட்டமைப்பை வலுப்படுத்தும் வேலைகளில் இருக்கிறோம். தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டின் கட்சியின் கொள்கை, எதிரி யார்.. நண்பன் யார்.. என்பதையெல்லாம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம்” என்றனர்.
தொடர்ந்து பேசியவர்கள் “தமிழ்நாடு அரசு போதை புழக்கத்தை தடுக்க தவறியதென்பது பகிரங்க கண்டனமாகத்தான் பார்க்க வேண்டும், விஜய் அரசியல் பேசவே தயங்குகிறார் என்ற விமர்சனங்கள் ஏற்புடையதல்ல. அது மாணவர்கள் பங்கேற்ற நிகழ்ச்சி என்பதால் அதோடு நிறுத்திக் கொண்டார்” என்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88