பங்குச் சந்தை: பறிபோன ரூ.38 லட்சம் கோடி; வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு வேலை பார்த்த மோடி, அமித்ஷா | Stock market: lost Rs.38 lakh crore; Modi and Amit Shah work

பங்குச் சந்தை தேர்தல் முடிவுகளுக்கு முதல் நாள் பயங்கரமாக உயர்ந்து, முடிவுகளின் போது பயங்கரமாக விழுந்தது. இதுகுறித்து இன்று மாலை பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினார் காங்கிரஸின் மூத்தத் தலைவர் ராகுல் காந்தி. அப்போது, அவர் வரிசைப்படுத்திய விஷயங்கள்…

மே 13 -ம் தேதி, ஜூன் 4-க்கு முன்பாக பங்குகளை வாங்குங்கள் என்கிறார் அமித் ஷா.

அடுத்து மே 19 மற்றும் 28 ஆகிய தேதிகளில் பங்குச் சந்தை ரெக்கார்ட் பிரேக் செய்யும். ஜூன் 4-க்குள் வாங்குங்கள் என்று பிரதமர் வலியுறுத்துகிறார்.

ஜூன் 2 மாலை எக்ஸிட் போல் வெளியாகிறது. பி.ஜே.பி மாபெரும் வெற்றி என்கிறார்கள்.

அமித் ஷா மற்றும் மோடி சொன்னது போல ஜூன் 3-ல் பங்குச் சந்தை ரெக்கார்ட் பிரேக் செய்கிறது. வரலாறு காணாத உச்சத்துக்குச் செல்கிறது.

ஜூன் 4 மொத்தமாக பங்குச் சந்தை கீழே விழுகிறது.

ராகுல் காந்திராகுல் காந்தி

ராகுல் காந்தி

இதில் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளது. மக்கள் பணம் ரூ.38 லட்சம் கோடி…  மோசடி செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் இருவரும் யாருக்காகவோ துணை போயுள்ளனர். வெளிநாட்டு முதலீட்டாளர்கள் யார் யார் என்பதைக் கண்டறிய வேண்டும். எக்ஸிட் போல் நடத்தியவர்கள் மீதும் விசாரணை நடத்த வேண்டும். இதற்காக கூட்டு நாடாளுமன்ற கமிட்டி அமைக்கப்பட்டு விசாரணை நடத்த வேண்டும்.

என்று இன்று மாலை நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பெரும் வெடிகுண்டை வீசியிருக்கிறார் ராகுல் காந்தி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *