பதவிநீக்கம் டு சிபிஐ விசாரணை: நீட், நெட் மோசடி… பாஜக அரசின் நிர்வாக திறமையின்மையை காட்டுகிறதா?! \ The bjp government ordered cbi enquiry into neet exam scam

தேர்வுக்கான வினாத்தாள் டார்க் நெட் எனப்படும் சிறப்பு மென்பொருள் மூலம் மட்டுமே அணுகக்கூடிய  தொழில்நுட்பம் வாயிலாக  கசிந்திருக்கிறது. இந்த நிலையில், திட்டமிட்டு மோசடி செய்ய வினாத்தாளை கசிய விட்டிருக்கிறார்கள்.  முதலில் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்த மத்திய அரசு, சில இடங்களில் முறைகேடுகள் நடந்திருப்பதாக பின்னர் ஒப்புக்கொண்டது.

இந்த நிலையில், தேர்வு முறைகேடு தொடர்பாக  ஐ.பி.சி பிரிவுகள் 420, 120 பி, (ஏமாற்றுதல் மற்றும் குற்றச்சதி) ஆகியவற்றின் கீழ், அடையாளம் தெரியாத நபர்கள் மீது சி.பி.ஐ வழக்குப் பதிவு செய்திருக்கிறது. யு.ஜி.சி., நெட் தேர்வு முறைகேடுகள் குறித்து விசாரிக்க சி.பி.ஐ அதிகாரிகள் பீகாரின் நவாடா மாவட்டத்துக்குச் சென்றிருக்கிறார்கள். அவர்களின் வாகனம் மீது ஒரு கும்பல் கற்களை வீசி தாக்குதல் நடத்தியிருக்கிறது.

‘ஊழல்வாதிகள் எல்லாம் ஒன்று சேர்ந்திருக்கிறார்கள்’ என்று பிரதமர் மோடி மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின்போது மேடைதோறும் முழங்கினார். இப்போது, அவருடைய ஆட்சியில் மாணவர்களின் எதிர்காலத்தை நாசமாக்கும் வகையில், உயர்கல்விக்கான நுழைவுத் தேர்வுகளில் மோசடி நடைபெற்றிருப்பதாக பெரும் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. இந்த நிலையில், ‘இது குறித்து பிரதமர் மோடி வெளிப்படையாக விளக்கம் அளிப்பாரா? கல்வி அமைச்சரை நீக்குவது போன்ற துணிச்சலான முடிவுகளை எடுப்பாரா?’ என்று எதிர்க்கட்சிகள் கேட்கின்றன. பதில்… பிரதமருக்கு தான் வெளிச்சம்!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *