`பாவ புண்ணியத்தை நம்புகிறவன் நான்; தவறான தீர்ப்பை வழங்கினால்…’- நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கடிதம்! | Justice GR swaminathan written letter to advocates

ஒரு வழக்கறிஞர் நீதிபதியின் நம்பிக்கையை இழந்துவிட்டால் அவரது தொழிலுக்கு ஆபத்தாகிவிடும். வழக்கறிஞர் நீதிமன்றத்தில் என்னை ஏமாற்றினால், அது குறித்து கருத்தாகவோ, புகாராகவோ சக நீதிபதிகளுடன் கூற கடமைப்பட்டுள்ளேன். அதை அவர் அவரது நண்பர்களிடம் தெரிவிப்பார்.

பாவம் புண்ணியம் என்ற கருத்தை நான் நம்புகிறேன். உங்களால் நான் தவறாக வழி நடத்தப்பட்டால், தவறான தீர்ப்பை நான் வழங்கினால் என் பாவத்தின் எண்ணிக்கை உயரும்.

மதுரை உயர் நீதிமன்றம்மதுரை உயர் நீதிமன்றம்

மதுரை உயர் நீதிமன்றம்

நீதிபதியின் கோபம் தற்காலிகமானது. உங்களின் நோக்கம் புத்திசாலியான வழக்கறிஞராக இருப்பதை விட, ஒரு நல்ல வழக்கறிஞராக இருக்க வேண்டும் என்பதாக இருக்க வேண்டும்.

டிஜிட்டல் ரிப்போர்ட்டிங் காரணமாக ஒவ்வொரு உத்தரவும் பதிவு செய்யப்படுகிறது. வழக்கறிஞர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க விரும்புகிறேன்.

மனுத்தாக்கல் செய்வதற்கு முன்பாக, இதற்கு முன்பாக இது தொடர்பான வழக்கு எதுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளதா? அதில் இதே கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதா? சரியான நபர்கள் எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்டுள்ளனரா? வழக்கு தொடர்பான ஆவணங்கள் முறையாக உள்ளதா? இவை அனைத்தையும் வழக்கறிஞர் உறுதி செய்ய வேண்டும்.

சில நேரங்களில் நான் என் பொறுமையை இழந்து விடுகிறேன். குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு இரண்டு வழக்கறிஞர்கள் அதனால் பாதிக்கப்படுகிறார்கள். ஒரு இளம் வழக்கறிஞரிடன் கடுமையாக நடந்துகொண்டதால், அவரை தனியாக அழைத்து வருத்தம் தெரிவித்ததற்கு, நன்றாக என்னை திட்டுங்கள் என்றார். ஓய்வுபெறும்போது ஒரு வழக்கறிஞரைம் காயப்படுத்தவில்லை என கூற விரும்புகிறேன்.

நான் உங்களிடமிருந்து கற்றுக் கொள்ள விரும்புகிறேன். அதற்கு உங்களின் ஒத்துழைப்பை கேட்கிறேன். உங்களின் வாழ்த்துகளோடு 8 ஆம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறேன். தொடர்ச்சியாக இயங்கிக் கொண்டிருப்பதை விரும்புகிறேன்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *