புதுச்சேரி: “போதைப் பொருளின் கீழ் மதுவைக் கொண்டுவருவது சாத்தியமில்லை!” – ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன்

புதுச்சேரி, கடலூர் என்.சி.சி-யைச் சேர்ந்த மாணவர்கள், பாய்மர படகில் காரைக்காலுக்கு செல்லும் கடல் சாகச பயணத்தை கடந்த 7-ம் தேதி மேற்கொண்டனர். அந்த பயணத்தில் ஈடுபட்ட 60 என்.சி.சி மாணவர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் 11 நாட்களுக்கு பின் நேற்று புதுவைக்கு திரும்பினர். அவர்களை வரவேற்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “என்.சி.சி மாணவர்கள், கடல் சாகச பயணத்தை துணிச்சலோடு செய்து முடித்துள்ளனர். மாணவர்கள் மத்தியில் போதைப் பொருளுக்கு எதிரான  உணர்வு விதைக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி அரசு

இளைய சமுதாயம் போதை பழக்க ஆதிக்கத்திலிருந்து விடுபட வேண்டும். புதுச்சேரியைப் பொறுத்தவரை நீண்டகாலமாகவே மதுபான கடைகள் இருக்கின்றன. பொதுமக்களுக்கு இடையூறு தரும் மதுக்கடைகள் மற்றும் ரெஸ்டோ பார்களை மூடுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும். போதைப் பொருள் பிரிவில் மதுவை கொண்டு வருவது நடைமுறைக்கு சாத்தியமில்லை. மதுவை போதைப் பொருளில் இருந்து தனியாக எடுக்க வேண்டும். முதலில் போதைப் பொருட்களை முற்றிலும் அகற்றுவோம். குடிமக்கள் வாழும் பகுதிகளில் உள்ள மதுக்கடைகளை அகற்ற அனைத்து முயற்சிகளும்  மேற்கொள்ளப்படும்.

கஞ்சா உட்பட போதைப் பொருள் விற்பனை குறித்து பொதுமக்கள் என் கவனத்துக்கு கொண்டுவந்தால், அந்த பகுதி காவல்துறை அதிகாரிகள்  மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். போதைப் பொருள் நடமாட்டம் புதுவையில் குறைந்து வருகிறது. அதேசமயம் முற்றிலுமாக ஒழிக்கப் படவில்லை. எனவே அதற்கு எதிரான கடுமையான நடவடிக்கைகள் தொடரும். சந்தனக் கட்டை துகள்கள் பதுக்கல் விவகாரத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இந்த விவகாரத்தில் தமிழக காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பையும் புதுவை காவல்துறை தரும்.

பார்

அவர்கள் எவ்வளவு வலிமையானவர்களாக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். சென்டாக் கன்வீனர் குறித்து பல புகார்கள் வந்துள்ளது. இதுகுறித்து இரண்டு நாட்களில் உரிய நடவடிக்கை  எடுக்கப்படும். தி.மு.க-வும், காங்கிரஸும் தமிழகத்தில் ஆட்சி செய்கின்றன. தமிழகத்தைவிட புதுச்சேரியில் மின் கட்டணம் உயர்வாக இருந்தால் சொல்லுங்கள்,  நடவடிக்கை எடுப்போம். எந்த இடத்தில் தவறுகள் நடந்தாலும், அதனை நிவர்த்தி செய்ய அத்தனை முயற்சிகளும் எடுக்கப்படும்” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *