`மாணவர்களுக்கு தரமற்ற சைக்கிள்; தமிழ்நாடு அரசு திரும்ப பெற வேண்டும்!’ – ப.சிதம்பரம் குற்றச்சாட்டு | Congress senior leader chidambaram urges tn govt to provide quality cycles to students

பள்ளி மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் இலவச சைக்கிள்கள் தரமற்று இருப்பதாகவும், அவற்றை திரும்ப பெற வேண்டும் எனவும் மாநிலங்களவை காங்கிரஸ் உறுப்பினரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் வலியுறுத்தி உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில்…

“தமிழ்நாட்டில் மாணவர்களுக்கு அரசு வழங்கிய இலவச சைக்கிள்களின் தரக்குறைவு குறித்து மாணவர்களும் ஆசிரியர்களும் கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள்

இந்த தரமில்லாத சைக்கிள்களை வேறு வழியில்லாமல் விற்க வேண்டிய கட்டாயம் மாணவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது என்று அறிந்து அதிர்ச்சியடைந்தேன்

சைக்கிள்களை தயாரித்து அளித்த நிறுவனங்கள் எவை? 3-4 நிறுவனங்களுக்கு மேல் இருக்க முடியாதே?

இந்தத் தரமில்லாத சைக்கிள்களைத் திரும்பப் பெற்று அவற்றுக்கு மாற்றாக தரமான சைக்கிள்களை அந்த நிறுவனங்கள் தர வேண்டும் என்று சட்டப்படியான நடவடிக்கைகளைத் தமிழ்நாடு அரசு எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *