முதியவரைத் தாக்கிய அரசுப் பேருந்து நடத்துநர், ஓட்டுநர் சஸ்பெண்ட் – நடந்தது என்ன?!

திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்துக்கு அரசுப் பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. கடந்த 10-ஆம் தேதி காலை வழக்கம்போல், இந்த அரசுப் பேருந்து செல்வதற்கு தயாராக நின்று கொண்டிருந்தது. அப்போது, அந்தப் பேருந்தில் பயணிப்பதற்காக அமர்ந்திருந்த முதியவரை பேருந்தின் ஓட்டுநர் முருகன், நடத்துநர் தங்கராஜ் இருவரும் கடுமையாக தாக்கி கீழே இறக்கி விட்டுள்ளனர். பேருந்தில் இருந்து கீழே இறங்கிய முதியவரை நடத்துநர் தங்கராஜ் குச்சியை வைத்து அடித்து தள்ளிவிடுகிறார். அதில், நிலைதடுமாறி அந்த முதியவர் கீழே விழுகிறார்.

இதை அங்கிருந்தவர்கள் வீடியோவாக எடுத்து சமூகவலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோ அதிக அளவில் பகிரப்பட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதுமட்டுமில்லாமல், மனிதத்தன்மையற்ற நடத்துநர் மற்றும் ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்டங்களும் எழுந்தன. இந்நிலையில், பேருந்தின் ஓட்டுநர் முருகன் மற்றும் நடத்துநர் தங்கராஜ் இருவரையும் பணியிடை நீக்கம் செய்துள்ளதாக போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

தாக்குதல்

இதுதொடர்பாக ஈரோடு மண்டல போக்குவரத்துக் கழக பொது மேலாளர் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்துக்கு கடந்த 10-ஆம் தேதி காலை அரசுப் பேருந்து செல்வதற்கு தயாராக நின்று கொண்டிருந்தது. பயணிகளை ஏற்றிக் கொண்டிருக்கும்போது, மூன்று பேர் அமரும் இருக்கையில் அமர்ந்திருந்த பெண் பயணி மீது மது போதையில் இருந்த முதியவர் தகாத முறையில் நடந்து கொண்டார்.

முதியவர்

இதனால், அந்த முதியவரை பேருந்தில் இருந்து இறக்கிவிட நடத்துநர் முருகன், ஓட்டுநர் தங்கராஜ் இருவரும் முயற்சி செய்தபோது, அவர் இறங்க மறுத்துவிட்டார். வலுக்கட்டாயமாக இறக்கிவிடும்போது, நடத்துநர் முருகன் முதியவரை தள்ளிவிட்டதால் அவர் கீழே விழுந்துவிட்டார். மது போதையில் இருந்த முதியவரிடம் இருந்து பெண் பயணியைக் காப்பாறவே நடத்துநரும், ஓட்டுநரும் இவ்வாறு நடந்துகொண்டுள்ளனர். இருந்தாலும், முதியவரைக் கீழே தள்ளிவிட்டது குற்றச்செயலாகும். அதன் அடிப்படையில் நடத்துநர் முருகன், ஓட்டுநர் தங்கராஜ் இருவரும் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *