`முளையிலேயே கிள்ளி எறியாவிட்டால்..!’- கோத்தகிரி மலைப்பாதையில் எழுதப்பட்ட வாசகம் குறித்து எல்.முருகன்

மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரிக்குச் செல்லும் கோத்தகிரி மலைப்பாதையோர தடுப்புச் சுவர்களில் ‘INDIA Impose NEET, Tamilnadu Quit India’ (நீட் தேர்வை இந்தியா திணிக்கிறது. இந்தியாவிலிருந்து தமிழ்நாடு வெளியேற வேண்டும்), ‘இந்தியா ஒழிக’ போன்ற வாசகங்களை மர்ம நபர்கள் இரவோடு இரவாக எழுதிச் சென்றுள்ளனர்.

நீட் எதிர்ப்பு வாசகம்

வாகன ஓட்டுநர்கள் சிலர் அளித்த தகவலின் பேரில் சென்ற காவல்துறையினர், இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நீட் தேர்வுக்கு எதிராக எழுதப்பட்ட இந்த வாசகங்களுக்கு பா.ஜ.க வினர் கடுமையான எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்த விவகாரம் தொடர்பாக தனது இணைய பக்கத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.‌ முருகன், “தமிழகத்தில் தி.மு.க கூட்டணியினர் செய்து வரும் நீட் வெறுப்பு பிரசாரம், தேச விரோத கும்பல்களுக்கு எந்த அளவிற்கு ஊக்கமளிக்கிறது என்பதற்கு சான்றுகள் தான் இவை. சுற்றுலா பயணிகள் அதிகம் செல்லும் நீலகிரி மாவட்டத்தின் கோத்தகிரி பகுதியில் சாலையோர சுவர்களில் நீட் எதிர்ப்பு என்ற போர்வையில் பிரிவினைவாத, தேசவிரோத கருத்துகள் அப்பட்டமாக பகிரப்படுகின்றன.

எல். முருகன்

தி.மு.க ஆட்சியில் பிரிவினைவாத தேச விரோத கும்பல்களின் செயல்பாடுகள் அதிகரித்து வருவது பாரத தேசத்தை நேசிக்கும் ஒவ்வொருவரையும் வேதனைக்குள்ளாக்கும் செயல். இதுபோன்ற பிரிவினைவாத கும்பல்களை முளையிலேயே கிள்ளி எரியாவிட்டால் தமிழகம் மிகப் பெரிய ஆபத்தை சந்திக்கும் சூழல் ஏற்படும். முதல்வர் திரு. மு. க ஸ்டாலின் கும்பல்களை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுத்து தேசவிரோத கும்பல்களை கைது செய்ய‌ வேண்டும் ” என கண்டனத்தை பதிவு செய்ததுடன், முதல்வர் ஸ்டாலினையும் டேக் செய்து பதிவிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *