யானை தந்தத்தை விற்க வனத்துறையினரிடமே பேரம் பேசிய நபர்கள்… திண்டுக்கல்லில் நடந்தது என்ன?! |3 persons arrested in elephant Ivory smugling

இந்நிலையில் யானை தந்தத்தை விற்பனை செய்ய மூன்றுபேர் முயல்வது குறித்து  தமிழ்நாடு வன மற்றும் வன உயிரினங்கள் குற்றத் தடுப்பு தனிபிரிவிற்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதையறிந்த மதுரை மண்டல வன மற்றும் வன உயிரின குற்ற கட்டுப்பாட்டு பிரிவினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதையடுத்து வனத்துறையினர்  கணேசன் மற்றும் சோமசுந்தரத்தை அடையாளம் கண்டு அவர்களை தொடர்பு கொண்டு யானை தந்தம் வாங்குபவர்கள் போல நடித்து பேரம் பேசியுள்ளனர். அப்போது ஒரு கோடி ரூபாய் பணம் கொடுத்தால் இரண்டு தந்தங்களையும் தருவதாக வனத்துறையினரிடம் அவர்கள் விலை பேசியுள்ளனர்.

இச்சூழலில் யானை தந்தத்தை விற்பனை செய்ய கன்னிவாடிக்கு கொண்டு வருமாறு வனத்துறையினர் கூறியுள்ளனர். இதையடுத்து ராமு, கணேசன் மற்றும் சோமசுந்தரம் ஆகிய மூவரும் யானைத்தந்தத்துடன் கன்னிவாடிக்கு சென்றபோது, வனத்துறை சார்பில் அமைக்கப்பட்ட ஆறு பேர் கொண்ட தேடுதல் குழுவினர் இவர்கள் மூவரையும் வழிமறித்து  கைது செய்தனர்.

தொடர்ந்து  வனத்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் யானைதந்தத்தை அறுத்து எடுத்து வந்த ராமுவையும் கைது செய்தனர். பின்னர், யானை தந்தம் எங்கிருந்து எடுக்கப்பட்டது என்பதை அறிய வனப்பகுதிக்குள் ராமுவை அழைத்துச் சென்று பார்த்த போது  வனப்பகுதிக்குள் யானை இறந்து கிடந்ததற்கான தடயங்களும் எலும்புக்கூடுகளும் கிடந்தது தெரியவந்ததையடுத்து இவர்கள் மூவரையும் கைது செய்ததோடு, 2 கிலோ எடை, 40 செ.மீ. உயரம் கொண்ட 2 யானை தந்தம், 3 டூவீலர், 3 அலைபேசிகளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் இதில் தொடர்புடைய சிலரை தேடிவருகின்றனர்.

பழனியில் வனச்சரக கண்காணிப்பாளர்,  வனக்காவலர், வனவர், வனச்சரக அலுவலர் என பலரும் பணியில் இருந்தும், வனப்பகுதியில் யானை ஒன்று இறந்ததும், அதிலிருந்து தந்தத்தை ஒருவர் வெட்டி கடத்தியதும், பல மாதங்களாக அது தெரியாமல் இருந்ததும் பொதுமக்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *