மேலும், “சென்னையைப் பொறுத்தவரை சுகாதாரம் என்பது மிக மோசமாக உள்ளது. ஸ்வச் பாரத் கணக்கெடுப்பில் 44, 45- ஆவது இடத்தில் இருந்தச் சென்னை இன்று, நூறைத் தாண்டி இருநூறாவது இடம்’, ‘மக்காத குப்பை’யெல்லாம் இவர்கள் பிரிப்பது கிடையாது. அடுத்து மழைப் பெய்தால் இந்தக் குப்பைகள் எல்லாம், அதில் கலக்கும். அது குடிநீர் பைப்புகளில் கலக்கும். அதை மக்கள் குடிப்பார்கள். ஆனால், இதைப் பற்றியெல்லாம் சுகாதார அமைச்சர் பேசுவது கிடையாது” என்றார்.
மேலும், “கள்ளச் சாராய மரணங்களுக்கு 10 லட்சம் ரூபாய் ஓடிபோய் கொடுக்கும் தமிழக அரசு, மக்களுக்காக போராடும் காவல்துறைக்கு, தேர்தல் பணியில் ஈடுபட்ட காவலர்களுக்கு சிறப்பு ஊதியம் இன்னும் கொடுக்காமல் இருப்பது கண்டனத்திற்குரியது.
ஒரு முதலமைச்சர் வெளிநாட்டுக்குப் பயணம் செல்வது எந்தவிதத்திலும் தவறில்லை. வெளிநாடு செல்ல வேண்டும்; மக்களைப் பார்க்கவேண்டும்; முதலீடுகளைக் கொண்டுவர வேண்டும். ஆனால் தமிழகத்தில் மட்டும்தான் முதலமைச்சர், வெளிநாடு செல்வதற்கு வெள்ளை அறிக்கைக் கொடுக்காமல் தொடர்ந்து வெளிநாடு சென்றுக் கொண்டிருக்கிறார். தனிப்பட்ட முறையில் சென்றால் அதை நாங்கள் கேள்வி எழுப்பப்போவதில்லை. முதலமைச்சர் பொதுமக்களது வரிப்பணத்தில், ஐ.ஏ.எஸ் அதிகாரிகளையும் கூட்டிச் செல்லும்போது அதை மக்கள் கேள்விக் கேட்கிறார்கள். முதலமைச்சர் துபாய், ஜப்பான், சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு மேற்கொண்ட பயணத்தால் கிடைத்த லாபம் என்னவென்று கேட்டால், ஒரு ரூபாய் கூட கிடையாது, ஜீரோ.