வெளிநாட்டு கோதுமைக்கு அனுமதி, உள்நாட்டுக் கோதுமைக்கு சமாதி, இதுதான் `தெய்வக்குழந்தை’ மோடியின் நீதி!| Agriculture: Suffering of Wheat Farmers; Does Modi know?

உலக வர்த்தக அமைப்பின் (World Trade Organisation) ஷரத்துகளின்படி, வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கோதுமைக்கு 40% வரியை இந்தியா விதிக்கலாம். ஆனால், வணிகர்களுக்காகவே அவதாரமெடுத்து வந்ததிருக்கும் தெய்வக்குழந்தை எப்படி வரிவிதிக்கும்? கார்ப்பரேட் கம்பெனிகளான பிஸ்கட் தயாரிப்பு மற்றும் கோதுமை மாவு மில் முதலாளிகள் லாபம் கொழிக்கும் வகையில், வரியில்லாமல் கோதுமையை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கியுள்ளார்.

இப்படி வரியில்லாமல் இந்திய சந்தைக்கு வெளிநாட்டுக் கோதுமை வருமேயானால், இங்கே கோதுமை விலை குவிண்டால் 2000 ரூபாய்க்கும் கீழே கூட சரிந்தாலும் ஆச்சர்யப்பட ஒன்றும் இல்லை. இதுதான், இந்த ‘தெய்வப் பிறவி’ விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பு ஆக்கும் லட்சணம்.

கன்னியாகுமரி விவேகானந்தர் பாறை மீது அமர்ந்து தியானம் கன்னியாகுமரி விவேகானந்தர் பாறை மீது அமர்ந்து தியானம்

கன்னியாகுமரி விவேகானந்தர் பாறை மீது அமர்ந்து தியானம்

விவசாயிகளிடமிருந்து, 32 மில்லியன் டன் கோதுமையைக் கொள்முதல் செய்ய வேண்டிய இடத்தில், 26 மில்லியன் டன் கோதுமையை மட்டுமே இந்திய அரசு கொள்முதல் செய்துள்ளது.

கோதுமை உற்பத்தியில் இந்தியா உலகில் அளவில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்த 2024-25 ஆண்டு இலக்கான 112 மில்லியன் டன் உற்பத்தியில் சிறிது சரிவு. பருவநிலை மாற்றம், புவி வெப்பமயம் ஆகியவை விளைச்சலை பெரிய அளவில் பாதிக்கும் என்கிறார்கள் சுற்றுச்சூழல் வல்லுநர்கள். வரலாற்றில் முதல் முறையாக புதுடெல்லியில் 52.9 சி வெப்பம் எகிறி இருக்கிறது என்றால், வருங்காலத்தில் இன்னும் மோசமான விளைவுகளை இந்தியா சந்திக்க வேண்டிவரும்.

இதுபற்றியெல்லாம் எந்தச் சிந்தனையும் இல்லாமல், ‘தெய்வக் குழந்தை’ கன்னியாகுமரி விவேகானந்தர் பாறை மீது அமர்ந்து தியானம் செய்கிறாராம்… காலக்கொடுமை.

அவதார புருஷரான கிருஷ்ண பகவான், தாயின் வயிற்றில் பிறந்தவர்தான். மற்றொரு அவதார புருஷர் ராமர்கூடத் தாயின் வயிற்றில் பிறந்தவர்தான். ஆனால், நமது தெய்வக் குழந்தை மோடிஜி, தாயின் வயிற்றில் இருந்து பிறந்ததை ஏற்க மறுத்து, ‘வானத்திலிருந்து குதித்தவன் நான்’ என்கிறார்.

இப்படி மண்டைக் காய்ந்து கிடப்பவரிடமெல்லாம் என்ன பேசி… என்ன ஆகப்போகிறது?

வாழ்க… பாரதம்

-தூரன் நம்பி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *