வேலைநேரத்தில் Candy Crush கேம்; திடீர் சோதனையில் சிக்கிய அரசுப் பள்ளி ஆசிரியர் – அடுத்து நடந்ததென்ன? | uttar pradesh government school teacher suspended after finds he play games in smartphone during work hours

உத்தரப்பிரதேசத்தில் அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவர், பள்ளியில் வேலைநேரத்தில் Candy Crush கேம் மற்றும் இதர சமூக வலைதளங்களில் நேரம் செலவிட்டது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, உடனடி நடவடிக்கையாக சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார்.

முன்னதாக, சம்பல் மாவட்டத்திலுள்ள அரசுப் பள்ளிக்கு வருகை தந்த டிஸ்ட்ரிக்ட் மாஜிஸ்திரேட் ராஜேந்திர பன்சியா, மாணவர்களின் வீட்டுப்பாட நோட்டுகளை சரிபார்த்தபோது முதல் பக்கத்திலிருந்தே அதில் தவறுகள் இருப்பதைக் கண்டார். குறிப்பாக, ஆறு மாணவர்களின் நோட்டுகளில் 95 தவறுகளை மாஜிஸ்திரேட் கண்டார்.

பள்ளி வகுப்பறைபள்ளி வகுப்பறை

பள்ளி வகுப்பறை
Pixabay

அதையடுத்து, உதவி ஆசிரியர் பிரியம் கோயலின் ஸ்மார்ட்போனை மாஜிஸ்திரேட் சோதனை செய்தபோது, வேலைநேரத்தில் ஆசிரியர் சுமார் இரண்டு மணிநேரம் Candy Crush கேம் விளையாடியிருப்பதும், சுமார் அரை மணிநேரம் சமூக வலைதளங்களில் நேரம் செலவிட்டதும் தெரியவந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *