262 முறையற்ற பத்திரங்கள்… சிக்கிய திமுக கவுன்சிலர் – காட்பாடி சார் பதிவாளர் அலுவலக ரெய்டு பின்னணி! | 262 illegal documents – trapped dmk councilor – katpadi sub registrar’s office raid background

சிவகுமார் சிக்கவில்லை என்றாலும், சார் பதிவாளர் அலுவலகத்துக்குள் வேலூர் மாநகராட்சியைச் சேர்ந்த தி.மு.க கவுன்சிலர் ஒருவரும், காங்கிரஸ் பிரமுகர் ஒருவரும் பணத்துடன் பிடிபட்டனர். தி.மு.க கவுன்சிலரிடம் ரூ.1.35 லட்சம், காங்கிரஸ் பிரமுகரிடம் ரூ.25 ஆயிரம் என அலுவலகத்துக்குள் இருந்து மொத்தமாக ரூ.2.14 லட்சம் பணத்தை பறிமுதல் செய்திருக்கின்றனர். 2-வது நாளாக இன்றைய தினமும், விஜிலென்ஸ் போலீஸார் சோதனையில் ஈடுபட்டு, விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இது குறித்து நம்மிடம் பேசிய பதிவுத்துறை அதிகாரி ஒருவர், “காட்பாடி பகுதிகளில் ஏறக்குறைய 200 ஏக்கரிலான அரசுப் புறம்போக்கு நிலங்களுக்கு முறையற்ற பத்திரங்கள் பதிவுசெய்யப்பட்டு விற்பனைச் செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வருகின்றன.

விஜிலென்ஸ் ரெய்டுவிஜிலென்ஸ் ரெய்டு

விஜிலென்ஸ் ரெய்டு

தணிக்கையில் 262 முறையற்ற பத்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டு, அவற்றை `கேன்சல்’ செய்வதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருக்கின்றன. பதிவுச் சட்டம் 17B ஒழுங்கு முறையின்கீழ், முதற்கட்டமாக 120 முறையற்ற பத்திரங்களை ரத்து செய்வதற்கான நடவடிக்கைகள் தொடங்கிவிட்டன. காட்பாடி கசம் பகுதியிலுள்ள தேவாலயத்துக்குச் சொந்தமான இடத்தையும் ஆளுங்கட்சி பிரமுகர் ஒருவர் இப்படித்தான் மோசடியாக தனது பெயரில் பத்திரம் பெற்றுள்ளார். அனைத்து ஆவணங்களும், பத்திரங்களும் தணிக்கை செய்யப்பட்டு வருகின்றன. இதுமாதிரியான நிலங்களை பணம் கொடுத்து வாங்கியவர்கள்தான் கடைசியில் ஏமாற்றமடைந்துபோகிறார்கள்’’ என்றார் விரிவாக.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *