3ஆவது முறையாக பிரதமர் – மோடிக்கு தவெக தலைவர் விஜய் வாழ்த்து – News18 தமிழ்

3ஆவது முறையாக பிரதமராகப் பதவியேற்றுள்ள மோடிக்கு தவெக தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்றது. இதன் முடிவுகள் கடந்த ஜூன் 4ஆம் தேதி வெளியிடப்பட்டது.

370 இடங்கள் பெறுவோம் என கூறிவந்த நிலையில், பாஜக மட்டும் தனித்து 240 இடங்கள் பெற்றது. இதனால்  தனிப்பெரும்பான்மையின்றி கூட்டணி கட்சிகள் துணையுடன் ஆட்சி அமைக்கிறது பாஜக.

நேற்று பிரதமர் மோடி பதவியேற்றுக்கொண்ட நிலையில், அவருடன் 30 கேபினட் அமைச்சர்கள், 5 தனி பொறுப்புடன் கூடிய இணை-அமைச்சர்கள் மற்றும் 36 இணை அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர்.

விளம்பரம்

இதையும் படிக்க:
26 வயதில் எம்.பி., 36 வயதில் மத்திய அமைச்சர் – யார் இந்த ராம் மோகன் நாயுடு?

இதில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 27 பேருக்கும், பட்டியலினத்தைச் சேர்ந்த 10 பேருக்கும், பழங்குடியினத்தைச் சேர்ந்த 5 பேருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சிறுபான்மையினர் 5 பேரும் அமைச்சர்களாக பொறுப்பேற்றுள்ளனர்.

இந்நிலையில், பிரதமர் மோடி பதவியேற்றதற்கு தவெக தலைவெர் விஜய் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

விளம்பரம்

இதுகுறித்து தமிழக வெற்றிக்கழக தலைவருமான விஜய் வெளியிட்டுள்ள பதிவில், 3ஆவது முறையாக பதவியேற்றுள்ள பிரதமர் மோடியை வாழ்த்துவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பிரதமராகப் பதவியேற்றுள்ள மோடிக்கு தமிழக ஆளுநர், முதலமைச்சர் உள்ளிட்டோரும் தங்களது வாழ்த்துகளை ட்விட்டர் வாயிலாக தெரிவித்துள்ளனர்.

.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *