Alimony: `எந்த மதத்தவராக இருந்தாலும் ஜீவனாம்சம் வழங்க வேண்டும்’ – முஸ்லிம் கணவரின் மனு தள்ளுபடி | Supreme order to muslim husband to give alimony to his divorced wife under CrPC section 125

விவாகரத்தான மனைவிக்கு ஜீவனாம்சம் வழங்க உத்தரவிட்ட வழக்கில், மேல்முறையீடு செய்த இஸ்லாமிய கணவரின் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடிசெய்து, எந்த மதத்தவராக இருந்தாலும் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டிருக்கிறது.

இந்த வழக்கைப் பொறுத்தவரை, தெலங்கானாவைச் சேர்ந்த முகமது அப்துல் சமத் என்பவருக்கு, விவாகரத்தான மனைவிக்கு மாதம் ரூ.20,000 ஜீவனாம்சம் வழங்குமாறு குடும்பநல நீதிமன்றம் முன்பு உத்தரவிட்டிருந்தது. இதனை எதிர்த்த முகமது அப்துல் சமத், தெலங்கானா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அங்கேயும், ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்பதை உறுதிசெய்த உயர் நீதிமன்றம், அதன் தொகையை ரூ.10,000-ஆக குறைத்தது.

இஸ்லாமிய பெண் - ஜீவனாம்சம்இஸ்லாமிய பெண் - ஜீவனாம்சம்

இஸ்லாமிய பெண் – ஜீவனாம்சம்
சித்திரிப்புப் படம்

இந்த உத்தரவையும் எதிர்த்த முகமது அப்துல் சமத், இஸ்லாமிய பெண்கள் (விவாகரத்து மீதான உரிமைகள் பாதுகாப்பு) சட்டம் 1986-ஐ முன்வைத்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இதில், இஸ்லாமிய பெண்கள் (விவாகரத்து மீதான உரிமைகள் பாதுகாப்பு) சட்டம் 1986 ஆனது, இஸ்லாமிய பெண் விவாகரத்து பெற்ற பிறகு இத்தாத்தின் போது மட்டும் (90 நாள்கள்) ஜீவனாம்சம் பெற முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *