Exit Poll-ல் 350-ஐ தாண்டிய பாஜக கூட்டணியும்… பிரசாந்த் கிஷோரின் முதல் ரியாக்சனும்! | do not waste your valuable time on useless talks and analysis, prashant kishor first reaction after exit poll

இந்த நிலையில், கடந்த கால தேர்தல்களில் பா.ஜ.க, திரிணாமுல் காங்கிரஸ், தி.மு.க ஆகிய கட்சிகளுக்கு தேர்தல் ஆலோசகராக செயல்பட்ட பிரசாந்த் கிஷோர், அடுத்த தேர்தலில் தேவையற்ற பேச்சுகளில் நேரத்தை வீணாக்காதீர்கள் எனத் தெரிவித்திருக்கிறார்.

பிரசாந்த் கிஷோர்பிரசாந்த் கிஷோர்

பிரசாந்த் கிஷோர்

குறிப்பாக, தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியான அடுத்த சில மணிநேரங்களில் முதல் ரியாக்சனாக பிரசாந்த் கிஷோர், “அடுத்த முறை தேர்தல் மற்றும் அரசியலைப் பற்றி பேசப்படும்போது, ​​போலி பத்திரிகையாளர்கள், சத்தம் போட்டு பேசும் அரசியல்வாதிகள், சமூக ஊடக வல்லுநர்கள் என்று தங்களைத் தாங்களே சொல்லிக்கொள்பவர்களின் தேவையற்ற பேச்சுகள் மற்றும் பகுப்பாய்வுகளில் உங்களின் பொன்னான நேரத்தை வீணாக்காதீர்கள்” என்று ட்வீட் செய்திருக்கிறார்.

பிரசாந்த் கிஷோர் இந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கிடையில் தனியார் ஊடகங்களில், பாஜக கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பெற்ற இடங்கள் அல்லது அதற்கும் சற்று அதிகமான இடங்களில் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியமைக்கும் என்றும், தென்னிந்தியாவில் பா.ஜ.க-வின் வாக்கு சதவிகிதம் அதிகரிக்கக்கூடும் என்று தொடர்ச்சியாகக் கூறிவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *