Hathras:கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவர்களுடன் சந்திப்பு: `அரசியலாக்க விரும்பவில்லை’ – ராகுல் காந்தி

உத்தரப்பிரதேச மாநிலம், ஹத்ராஸ் அருகில் உள்ள கிராமத்தில், உள்ளூர் மத குரு ஒருவரை கெளரவிக்கும் விதமாக சத்சங் எனும் மதப் பிரார்த்தனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட அதிகமான மக்கள் காலந்துகொண்டதாக கூறப்படுகிறது. பெண்கள், குழந்தைகள் என சுமார் 2.5 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் அந்த பிரார்த்தனைக் கூட்டத்தில் காலந்துகொண்டதாக காவல்துறை தெரிவித்திருக்கிறது. அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 123 பேர் உயிரிழந்தனர்.

ஹத்ராஸ் – ராகுல் காந்தி
ஹத்ராஸ் – ராகுல் காந்தி

இந்த விவகாரம் இந்தியா அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சத்சங்கத்தை ஏற்பாடு செய்தவர்களில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால், இந்த கூட்டத்துக்கு முக்கிய காரணமான சாமியார் நாராயண் சாகர் விஷ்வ ஹரி தற்போதுவரை கைது செய்யப்படவில்லை. அலகாபாத் உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதியின் கீழ் இந்த வழக்கை விசாரிக்க உத்தரப்பிரதேச அரசு விசாரணைக் குழுவை அமைத்துள்ளது. இந்த நிலையில், இன்று காலை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஹத்ராஸ் பகுதிக்கு சென்று பதிக்கப்பட்டவர்களை சந்தித்தார்.

அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர்,“இது ஒரு சோகமான சம்பவம். பலர் இறந்துள்ளனர். இதை நான் அரசியலாக்க விரும்பவில்லை. ஆனால் நிர்வாகத்தின் தரப்பில் குறைபாடுகள் இருக்கின்றன. உயிரிழந்தவர்களில் பெரும்பலானவர்கள் ஏழைகள் என்பதால், அதிகபட்ச இழப்பீடு வழங்கப்பட வேண்டும். இழப்பீடு வழங்குவதில் தாமதம் ஏற்பட்டால், அது யாருக்கும் பயனளிக்காது. நிகழ்ச்சிக்கு காவல்துறை பாதுகாப்பு ஏற்பாடு சரியான முறையில் இல்லை என பதிக்கப்பட்டவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

ஹத்ராஸ் – ராகுல் காந்தி
ஹத்ராஸ் – ராகுல் காந்தி

காங்கிரஸ் தலைவர் டேனிஷ் அலி, “நான் பதிக்கப்பட்டவர்களின் நிலைமையை புரிந்து கொள்ள விரும்பினேன்…இது ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவம். நாங்கள் காலை 5 மணிக்கு ராகுல் காந்தியுடன் புறப்பட்டோம். பாதிக்கப்பட்டவர்களின் கதைகள் இதயத்தை உலுக்குகின்றன… நிர்வாகத்தின் எந்தப் பொறுப்பும் சரியாக செயல்படவில்லை. அரசாங்கம் இதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

ராகுல் காந்தி சென்றப் பிறகு பதிக்கப்பட்டவர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது,“ராகுல் காந்தி அவருடைய கட்சி மூலம் எங்களுக்கு எல்லா வகையிலும் உதவுவதாக உறுதியளித்தார். சத்சங் அரங்கில் நிர்வாகம் சரியில்லை. முறையான மருத்துவ வசதி இருந்திருந்தால் பலரை காப்பாற்றியிருக்கலாம். அந்த இடத்தில் எந்த முறையான ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை. இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க நாடாளுமன்றத்தில் இந்த பிரச்னை குறித்து குரல் எழுப்புமாறு கேட்டுக் கொண்டோம்” எனக் குறிப்பிட்டிருக்கின்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *