Location Sharing: `ஜாமீன் பெறுவதற்கு கூகுள் மேப் லொகேஷனா?’ – நிபந்தனைகளை தளர்த்திய உச்ச நீதிமன்றம் | Supreme Court says courts can’t ask accused to share Google Maps location as bail condition

குற்ற வழக்கில் தொடர்புடைய ஒருவர் ஜாமீன் கேட்டு டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், `குற்றம்சாட்டப்பட்டவர்கள் ஜாமீனில் வெளியே வந்து, எங்கே எல்லாம் செல்கிறார்கள் என்பதை அறிய வேண்டும். எனவே அதற்காக குற்றம்சாட்டப்பட்டவர்கள் கூகுள் லோக்கேஷனை காவல்துறைக்கு பகிர வேண்டும்” என்று நிபந்தனையுடன் ஜாமீன் அளித்தது. மேலும், இது ஜாமீன் பெறுவோருக்கு நிபந்தனையாக விதிக்கப்படுவது தொடர்ந்தது.

உச்ச நீதிமன்றம்உச்ச நீதிமன்றம்

உச்ச நீதிமன்றம்

இந்த நிலையில், இது தொடர்பான புகார் மனு ஒன்றை உச்ச நீதிமன்ற நீதிபதி உஜ்ஜால், பையன் தலைமையிலான அமர்வு விசாரித்தது. அதைத் தொடர்ந்து நீதிபதிகள், “ஜாமீனில் வெளி வரக்கூடிய நபர்களின் இருப்பிடங்களை தொடர்ந்து காவல்துறை கண்காணிக்கும் வகையில், சம்பந்தப்பட்ட நபர்களின் இருப்பிடங்கள் குறித்த கூகுள் லொகேஷன் தகவல்களை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையை இனி விதிக்கக் கூடாது. இது குற்றம்சாட்டப்பட்ட ஒருவரின் தனியுரிமை உரிமைகளை மீறுவதற்கு சமம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *