Lok Sabha Election 2024: பிரதான கட்சிகளை வீழ்த்தி அதிக வாக்கு வித்தியாசத்தில் வென்ற சுயேச்சைகள்! | candidates who beat political parties to win as Independents

பெரும் எதிர்ப்பார்ப்புகளுக்கு மத்தியில் நடந்து முடிந்திருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள், பா.ஜ.க-வை இன்னும் அதிர்ச்சியில் வைத்திருக்கிறது. பா.ஜ.க-வின் கோட்டையான உத்தரப்பிரதேசத்தில் பாதிக்கும் குறைவான இடங்களைப் பெற்ற பா.ஜ.க, அயோத்தி ராமர் கோயில் இருக்கும் பனாரஸ் தொகுதியிலும் தோல்வியைத் தழுவியது. மத்திய அமைச்சர்களான ஸ்மிருதி இரானி, அஜய் மிஸ்ரா, அர்ஜுன் முண்டா, ராஜீவ் சந்திரசேகர், எல்.முருகன் எனப் பலர் பெருமளவிலான வாக்கு வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தனர்.

அம்ரித்பால் சிங்அம்ரித்பால் சிங்

அம்ரித்பால் சிங்

இந்த நிலையில், பெரிதாக அரசியல் பின்புலம் இல்லாமல் சுயேச்சையாகப் போட்டியிட்ட வேட்பாளர்கள் பிரதான கட்சிகளின் வேட்பாளர்களை விட அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றிருக்கின்றனர்.

அவர்கள் குறித்துப் பார்க்கலாம்;-

1. பஞ்சாப் மாநிலம், காதூர் சாஹிப் மக்களவைத் தொகுதியில், தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு,அஸ்ஸாமின் திப்ருகர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அம்ரித்பால் சிங், சுயேச்சையாகப் போட்டியிட்டார். அதே தொகுதியில் ஆம் ஆத்மி வேட்பாளர், பா.ஜ.க வேட்பாளர், காங்கிரஸ் வேட்பாளர்களை விட 1,97,120 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றிருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *