NEET: `நீட் ஒழிக்கப்பட வேண்டும்!’ – மசோதா நிறைவேற்ற பாஜக கூட்டணிக்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல் | ADMK chief Edappadi Palanisamy urges BJP alliance govt should pass bill abou NEET ban

இந்த நிலையில், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, நீட் தேர்வை முற்றிலுமாக ரத்துசெய்ய மசோதா நிறைவேற்றுமாறு பா.ஜ.க கூட்டணி அரசுக்கு அ.தி.மு.க சார்பாக வலியுறுத்தியிருக்கிறார்.

இது குறித்து எடப்பாடி பழனிசாமி தனது X சமூக வலைதளப் பக்கத்தில், “நீட் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ள கருத்துகள், பிறப்பித்துள்ள உத்தரவுகள், நீட் தேர்வு குறித்த முறைகேடுகள் தொடர் அம்பலம், நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்கள் நீட் எதிர்ப்பு நிலைப்பாட்டை எடுத்திருப்பது, நீட் தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமையின் தலைவர் நீக்கம், முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு ஒத்திவைப்பு என தொடர்ச்சியான நிகழ்வுகள் சொல்கின்ற செய்தி ஒன்றுதான், `நீட் தேர்வு முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டிய ஒன்று’.

எடப்பாடி பழனிசாமிஎடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

38 எம்.பி-க்களை வைத்துக்கொண்டு நீட் ஒழிப்புக்கு ஒரு துரும்பைக்கூட கிள்ளிப்போடாத தி.மு.க, தற்போது 40 எம்.பி-க்கள் இருந்தும் நாடாளுமன்றத்தில் நீட் குறித்த தீர்மானத்தைக் கொண்டுவராமல், மீண்டும் 3-வது முறையாக சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவருவதால் என்ன பயன்… இந்தத் தீர்மானம் இந்த விடியா தி.மு.க அரசின் மற்றுமொரு அரசியல் நாடகம். கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்களை மடைமாற்ற நினைக்கும் இது போன்ற பயனற்ற அரசியல் வித்தைகளை மக்கள் இனியும் நம்புவதாக இல்லை. நீட் தேர்வை நாடாளுமன்றம் மூலம் மறுபரிசீலனை செய்யவேண்டியது காலத்தின் கட்டாயமாகிவிட்டது.

காங்கிரஸ் - பாஜககாங்கிரஸ் - பாஜக

காங்கிரஸ் – பாஜக

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *