PM Modi in Russia: `எனது ஒரே குறிக்கோள் இதுதான்…’ – ரஷ்ய அதிபர் புதினிடம் மோடி பேசியதென்ன? | Putin | Putin | indian pm modi met russian president viladimir putin in russia

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அழைப்பின் பேரில் பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் அரசு முறை பயணமாக நேற்று மாஸ்கோ சென்றடைந்தார். விமான நிலையம் சென்றடைந்த அவரை அந்த நாட்டு மூத்த துணைப் பிரதமர் டெனிஸ் மான்டுரோவ் வரவேற்றார். பின்னர் அந்த நாட்டு பாரம்பர்ய முறைப்படி ராணுவ மரியாதையும், சிவப்புகம்பள வரவேற்பும் வழங்கப்பட்டது. இதையடுத்து பிரதமர் மோடிக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் நோவோ-ஓகாரியோவோவில் உள்ள அவரது அதிகாரப்பூர்வ இல்லத்தில் இரவு விருந்து அளித்தார்.

மோடி  - புதின் மோடி  - புதின்

மோடி – புதின்

அப்போது இரு தலைவர்களும் அதிகாரபூர்வமற்ற வகையில் பேச்சுவார்த்தை நடத்தினர். அது தொடர்பாக வெளியான தகவலில், ரஷ்ய அதிபர் புதின், “மதிப்பிற்குரிய பிரதமரே! அன்பான நண்பரே! வணக்கம், உங்களைப் பார்ப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நாளை அதிகாரபூர்வ உரையாடல்களை நிகழ்த்துவதற்கு முன்னால் இன்று, இந்த வீட்டுச் சூழலில், அமைதியாகப் பேசலாம். ஒருபுறம் இது நான் வசிக்கும் அதிகாரபூர்வ இல்லம். மறுபுறம் நான் சக ஊழியர்களுடன் பணிபுரியும் வளாகம். நீங்கள் மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு முதலில் உங்களுக்கு வாழ்த்துகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *