Tamil News Live Today: செல்போனில் பேசியபடி கார் ஓட்டிய டி.டி.எஃப் வாசன்… மதுரையில் வழக்குபதிவு, கைது!

மதுரையில் டிடிஎப் வாசன் மீது வழக்குப் பதிவு!

TTF Vasan

டிடிஎப் வாசன் காஞ்சிபுரம் பகுதியில் விலையுயர்ந்த இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்ற போது, விபத்து ஏற்பட்டது. இதுதொடர்பான வழக்கில் அவரது ஓட்டுனர் உரிமம் 10 ஆண்டுகள் ரத்து செய்யப்பட்டது. மேலும் பைக் ஓட்டுவதற்கும் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

இந்நிலையில் மதுரை வண்டியூர் டோல்கேட் பகுதியில் செல்போனில் பேசியபடி அஜாக்கிரதையாக கார் ஓட்டியதாக, டி.டி.எப் வாசன் மீது 6 பிரிவுகளின் கீழ் மதுரை அண்ணா நகர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.செல்போனில் பேசியபடி வாகனத்தை இயக்குதல், அஜாக்கிரதையாக காரை இயக்குதல், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல், கவனக்குறைவாக காரை இயக்குதல், அதிவேகமாக இயக்குதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து அவரை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.

இறுதி கட்ட வாக்குப்பதிவு… இன்று மாலையுடன் ஓய்கிறது பிரசாரம்! 

மக்களவைத் தேர்தல்

மக்களவை தேர்தலின் இறுதிக் கட்டமாக 57 தொகுதிகளில் ஜூன் 1-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அந்த தொகுதிகளுக்கான பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது.

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 19 -ம் தேதி தொடங்கியது. இதுவரை 6 கட்ட வாக்குப்பதிவு முடிந்துள்ளது. மொத்தமுள்ள 543 மக்களவை தொகுதிகளில் 486 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்து முடிந்துவிட்டது. மீதமுள்ள 57 தொகுதிகளுக்கு கடைசி கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதி உட்பட, பஞ்சாப், உத்தரபிரதேசத்தில் தலா 13 தொகுதிகள், பீகாரில் 8 தொகுதிகள், சண்டிகரில் ஒரு தொகுதி, இமாச்சல பிரதேசத்தில் 4 தொகுதிகள், ஜார்கண்டில் 3 தொகுதிகள், ஒடிசாவில் 6 தொகுதிகள், மேற்குவங்கத்தில் 9 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *